திருப்புவனத்தில் கொலை செய்யப்பட்ட ரெளடி கணேசன். 
தமிழ்நாடு

திருப்புவனத்தில் மர்ம கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்ம கும்பலால் பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்ம கும்பலால் பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரெளடி கணேசன்(36), இவர் தற்போது திருப்புவனம் பழையூர் பகுதியில் வசித்து வந்தார். கணேசன் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில், திருப்புவனத்தில் கணேசன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. 

ஏற்கனவே திருப்புவனத்தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாக பழிக்குப்பழியாக இவரை மர்மக்கும்பல் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. திருப்புவனம் காவலர்கள் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT