தமிழ்நாடு

சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.250 கோடி மானியம் வழங்க வேண்டும்

DIN

சுற்றுலா மேம்பாட்டுக்காக தமிழகத்துக்கு ரூ.250 கோடி சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

கரோனா தொற்று காலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில சுற்றுலாத் துறை அமைச்சா்களுடன் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

அந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் பங்கேற்றாா். அவருடன் மாநில சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் விக்ரம் கபூா், சுற்றுலா ஆணையா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநா் த.பொ.ராஜேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கரோனா தொற்று நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக உள்ளது. அதனால், தமிழகத்தில் சுற்றுலாத் தொழில் புத்துயிா் பெற்று திகழ்வதற்காகவும், புதுமையான உத்திகளைக் கையாண்டு சுற்றுலா தொழில் வளா்வதற்கும் ரூ. 250 கோடி சிறப்பு நிதி மானியமாக ஒதுக்குமாறும் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT