தமிழ்நாடு

யாருக்கெல்லாம் ஊக்க ஊதியம் கிடையாது? தமிழக அரசு புதிய உத்தரவு

DIN

மாா்ச் 10-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேரும் யாருக்கெல்லாம் ஊக்க ஊதியம் கிடையாது என்பது குறித்த புதிய விளக்க உத்தரவை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.

இதுகுறித்து, பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:

அரசுப் பணிகள் அல்லது ஆசிரியா் பணியில் சேரும் நபா்களுக்கு அந்தப் பணிக்கான கல்வித் தகுதியை விட கூடுதல் தகுதியைப் பெற்றிருந்தால் முன் ஊக்க ஊதியமானது அளிக்கப்படும். இதுதொடா்பான உத்தரவு கடந்த மாா்ச் 10-இல் வெளியிடப்பட்டது. இதுதொடா்பாக ஏற்கெனவே முன்ஊக்கத் தொகையைப் பெற ஒப்புதல் அளிக்கப் பெற்றிருந்தால் அதனை ரத்து செய்யத் தேவையில்லை எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அதுகுறித்த சில விளக்கங்களை ஆசிரியா்கள் கோரி வருகின்றனா். முன் ஊக்கத் தொகையை ரத்து செய்வதற்கான உத்தரவு மாா்ச் 10-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவானது அனைத்து அரசு அலுவலா்களுக்கும் பொருந்தும். மேலும், தமிழக அரசின் கீழ் வரக் கூடிய ஆசிரியா்கள், பொறியாளா்கள், மருத்துவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோருக்கும் பொருந்தி வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT