தமிழ்நாடு

ஆத்தூர் ராணிப்பேட்டையில் புதிய ஜவுளிக்கடைக்கு சீல்

DIN


ஆத்தூர்: ராணிப்பேட்டையில் புதியதாக இன்று வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட ஜவுளிக்கடையை பூட்டி ஆத்தூர் வட்டாசியர் சீல் வைத்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டையில் புதியதாக ஜவுளிக்கடை வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. கடை திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடியாக ஒரு சட்டை ரூ.20, ஒரு புடவை ரூ.23க்கும் விற்பனை செய்தனர். இதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதனால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் ஏராளமானோர் கூடியுள்ளனர். 

இதனையடுத்து அங்கு வந்த ஆத்தூர் வட்டாட்சியர் அ.அன்புச்செழியன், காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர், நகராட்சி வருவாய் ஆய்வாளர் நாகராஜன், துப்புரவு அலுவலர் என்.திருமூர்த்தி ஆகியோர் கடையில் இருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு கடைக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT