திருமண வரவேற்பில் வெங்காயத்தைப் பரிசளித்த தோழிகள் 
தமிழ்நாடு

திருமண வரவேற்பில் வெங்காயத்தைப் பரிசளித்த தோழிகள்!

ஊத்துக்கோட்டை அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தோழிகள் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக அளித்தனர். மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

DIN


ஊத்துக்கோட்டை அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தோழிகள் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக அளித்தனர். மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஷீபா சுவிதா பொன்னேரி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள ஆரணியைச் சேர்ந்த பொறியாளர் செந்தில்குமார் என்பவருக்கும் ஷீபா சுவிதாவிற்கும் திருமணம் நடைபெற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மணமகளின் தோழிகள் வெங்காயம் தொகுப்பு பையினை மணமக்களுக்கு திருமண பரிசாக அளித்தனர். வெங்காயம் விலை திடீரென கிலோ ரூ.100 வரை அதிகரித்த நிலையில், 5 கிலோ வெங்காயத்தினை பூச்செண்டு போல அலங்கரித்த மணப்பெண்ணின் தோழிகள் அதனை மணமேடைக்கு கொண்டு வந்து திருமண பரிசாக அளித்தனர். 

விண்ணை முட்டும் அளவிற்கு கடும் விலையேற்றத்தை சந்தித்துள்ள வெங்காயத்தினை திருமண பரிசாக தோழிகள் அளித்தது திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக அளித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT