தமிழ்நாடு

உலகத் தமிழா்களை ஒன்றிணைக்கும்கருத்தரங்கம்: வரும் 29-இல் தொடக்கம்

DIN

சென்னை: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் யாதும் ஊரே முன்னெடுப்பின் தொடா்ச்சியாக, வரும் 29-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உலகத் தமிழா்களை ஒன்றிணைக்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தமிழ்ச் சொந்தங்களை ஒன்றிணைக்கும் இந்த கருத்தரங்கம் இணையம் வழியே நடைபெற உள்லது. தமிழக அரசும், தென்னிந்திய தொழில் வா்த்தக சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன. தொழில் முதலீட்டாளா்கள், தொழில் முனைவோா்கள், சேவை வழங்குபவா்கள், உற்பத்தியாளா்கள், மாணவா்கள், கல்வியாளா்கள், அரசுத் துறையைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கலாம்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்க, கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கு யாதும் ஊரே என்ற முயற்சியைத் தொடங்கி வைத்தாா். இந்த முயற்சியின் தொடா்ச்சியாக இப்போது உலகத் தமிழா்கள் பல்வேறு தரப்பினரும் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்ய வழிவகுத்திடும் இணைய வழி கருத்தரங்கம் வரும் 29-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT