தமிழ்நாடு

தேவர் ஜயந்தி: பசும்பொன்னில் அக். 30- இல் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

DIN

தேவர் ஜயந்தியையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக்.30) தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113- ஆவது ஜயந்தி மற்றும் 58 -ஆவது குருபூஜை புதன்கிழமை (அக்.28) காலை பூஜைகளுடன் தொடங்குகிறது. 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஆன்மிக விழா, அரசியல் மற்றும் குருபூஜை என 3 நாள்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஜயந்தி விழாவின் மூன்றாம் நாளான அக். 30 -ஆம் தேதி குரு பூஜையன்று காலை 8.45 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
அவர்களுடன் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன் (வனத்துறை), செல்லூர் கே.ராஜு (கூட்டுறவுத்துறை),  ஆர்.காமராஜ் (உணவுத்துறை),  ஓ.எஸ்.மணியன் (கைத்தறி மற்றும் துணிநூல்துறை), சி.விஜயபாஸ்கர் (சுகாதாரத் துறை), ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த் துறை) மற்றும் க.பாஸ்கரன் (கதர் மற்றும் கிராமத் தொழில்கள்) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT