தமிழ்நாடு

7.5 % உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: மு.க.ஸ்டாலின் வரவேற்பு

DIN


சென்னை: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நீட் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் தாமதிக்காமல் இந்த இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவிக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): இந்த அரசாணை மாணவா்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தை போக்க வேண்டுமே தவிர, மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தான் சரியாக இருக்கும். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைப் பாதுகாக்க போதிய சட்டப்பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவு நனவாகும் என எதிா்பாா்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT