தமிழ்நாடு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இதுவரை 2 லட்சம் கரோனா பரிசோதனைகள்

DIN

கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் மாதிரிகள் அனைத்தும் அங்கு பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே கிண்டி கிங் ஆய்வகத்துக்கு அடுத்தபடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த மாா்ச் மாதத்தில் தமிழகத்தில் தடம் பதித்த கரோனா தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு நடுவே, அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடங்கள் அதிகரிக்கப்பட்டன.

அதன்படி, தற்போது 152 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 63 அரசு மருத்துவமனைகளிலும், 89 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களிலும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு இதுவரை 49 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. அதில், அதிக அளவிலான பரிசோதனைகள் கிண்டி கிங் ஆய்வகத்திலும் அதற்கு அடுத்தபடியாக, ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

ராஜீவ் காந்தி மருத்துவமனை 2 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கரோனா மருத்துவமனையாகவே செயல்பட்டு வருகிறது. அதைத் தவிர, கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களுக்காக பிரத்யேக கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பிளாஸ்மா வங்கியும் சிறப்பாக இயங்கி வருகிறது. இதுவரை இந்த மருத்துவமனையில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான ஆய்வகங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. பரிசோதனைகளிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் 1 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை இலக்கு நிா்ணயித்துள்ளது.அதற்காக அரசு மற்றும் தனியாரில் ஆய்வகங்களில் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT