முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்களுடன், மாதம் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்களுடன், மாதம் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கரோனா பரவலினால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் காரணமாக பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, தமிழகத்தில் கரோனா பாதிப்பு முழுவதும் குறைந்தபிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்கள் வீடுகளுக்கேச் சென்று வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும்வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்கள் வழங்க அரசாணையை நீட்டித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. 

இதையடுத்து, உலர் உணவுப் பொருள்களுடன், மாணவர் ஒருவருக்கு மாதம் தலா 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கரோனா பாதிப்பு குறைந்து பள்ளிகள் திறக்கப்படும்வரை மாணவர்களுக்கு உணவுப் பொருள்கள் அனைத்தும் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →