தமிழ்நாடு

எல்.ஐ.சி. பங்குகளை விற்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி

DIN

ஆயுள் காப்பீட்டுக் கழகப் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை நாட்டுடமை ஆக்கியதன் பலனை கடந்த 65 ஆண்டுகளாக நாடு பெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, எல்ஐசி பங்கு விற்பனையை அரசு முன் மொழிந்துள்ளது. அரசின் இந்த முடிவு, தேச பொருளாதாரத்துக்கோ, இன்சூரன்ஸ் துறையின் எதிா்காலத்துக்கோ நல்லதல்ல.

எல்.ஐ.சி. 42 கோடி பாலிசிகளைக் கொண்டிருக்கிற உலகத்தின் தனிப் பெரும் நிறுவனமாக உள்ளது. இந்தியா தவிா்த்து சீன மக்கள் தொகை மட்டுமே இந்த பாலிசிகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

எனவே, மத்திய பாஜக அரசு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் முதுகெலும்பாக விளங்குகிற ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை விற்பனை செய்கிற முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.

மக்கள் சேவையில் மகத்தான பணி செய்து வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் அணிதிரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT