தமிழ்நாடு

சங்ககிரி குடைவரை விநாயகருக்கு 5 மாதங்களுக்குப் பிறகு சங்கட சதுர்த்தி சிறப்புப் பூஜைகள்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு குடைவரை விநாயகருக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்புப் பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரி மலையில் மூன்றாவது மண்டபத்திற்கு அடுத்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்புறம் ஒரே பாறையினுள் செதுக்கப்பட்டுள்ள குடைவரை  விநாயகருக்கு  ஐந்து மாதங்களுக்குப் பிறகு சங்கடஹர சதுர்த்தியையொட்டி பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள்,  அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

குடைவரை விநாயகர் கோயிலில் உள்ள திருக்கோடி விளக்கினை சனிக்கிழமை ஏற்றி வைக்கும் அர்ச்சகர். 

விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் வைத்து நைவேத்தியம் படைக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.  பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

SCROLL FOR NEXT