வெறிச்சோடிக் காணப்பட்ட முன்பதிவு மையம். 
தமிழ்நாடு

சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடங்கியது: 3 மணி நேரத்தில் 20- க்கும் குறைவானோர் பதிவு 

சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படவுள்ள நிலையில், ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடங்கப்பட்ட 3 மணி நேரத்தில் 20 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

DIN


 
ஈரோடு:
சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படவுள்ள நிலையில், ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடங்கப்பட்ட 3 மணி நேரத்தில் 20 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
 
கரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் ரயில்சேவையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. தமிழகத்தில் பயணிகளின் நலன்கருதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கரோனா பரவல் அதிகமானதால் சிறப்பு ரயில்களை ரத்து செய்யும்படி தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டதையடுத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டது.  இதன்படி ஈரோடு ரயில்நிலையம் வழியாக கோவை- சென்னை சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்- சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை இன்டர்சிட்டி, கோவை-சென்னை கோவை எக்ஸ்பிரஸ், கோவை- மயிலாடுதுறை ஜன்சதாப்தி உள்ளிட்ட ரயில்கள்  திங்கள்கிழமை முதல் இயக்கப்பட உள்ளது. 

ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. 11 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 20- க்கும் குறைவானவர்களே முன்பதிவு செய்துள்ளதாக முன்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

SCROLL FOR NEXT