தமிழ்நாடு

சாலையில் கிடந்த தங்க மோதிரம் தவறவிட்டவரிடம் காவலர்கள் ஒப்படைப்பு

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை, வடக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து,  தவறவிட்டவரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல்காதர், அப்துல் ரஹிம் இருவரும் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் சனிக்கிழமை  நடந்து சென்றனர்.

அப்போது சாலையில் 4 கிராம் தங்க மோதிரம் கிடந்தது, அந்த தங்க மோதிரத்தை எடுத்து அருகில் விசாரித்தனர்.

சரியான தகவல் இல்லாததால் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கே.சிலைமணி மற்றும் காவலர்கள் வேலப்பர் கோவில் தெரு பகுதிக்கு சென்றனர். 

விசாரணையில் கம்பம் உத்தமபுரத்தைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் மோதிரம் வாங்கி சென்றதும், அதை தவற விட்டு சென்றதும் தெரியவந்தது.  முறையான ஆவணங்களை காட்டியதால் காவலர்கள் அவரிடம் மோதிரத்தை திரும்ப ஒப்படைத்தனர் முனியராஜ் நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT