தமிழ்நாடு

சென்னையில் 11 ஆயிரம் பேர் கரோனா சிகிச்சையில்

DIN


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 90% ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 11,029 பேர் (8%) சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், புதன்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களில் 1,29,677 பேர் குணமடைந்துள்ளனர். 11,029 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,896 பேர் பலியாகினர்.

சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகதில் 1166 பேரும், கோடம்பாக்கத்தில் 1149 பேரும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 391 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதே வேளையில், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் தான் கரோனா பாதித்தவர்களில் தலா 14,700 பேர் குணமடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT