தமிழ்நாடு

வெள்ளக்கோவிலில் ரூ.70 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை 

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.70 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு கரூர், வாணியம்பாடி, லாலாப்பேட்டை, வில்வாதம்பட்டி, மூலனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 223 விவசாயிகள் தங்களுடைய 1,642 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 78,961 கிலோ. காங்கயம், முத்தூர், மூலனூர், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 19 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.

விலை கிலோ ரூ.71.00 முதல் ரூ.109.85 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.108.15. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.70 லட்சத்து 49 ஆயிரத்து 940 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT