தமிழ்நாடு

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். 

DIN


சென்னை: மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 63.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் இன்று  சனிக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்.

சுதாங்கன், தினமணி, விகடன் குழுமங்களில் பணியாற்றியவர். சில தொலைக்காட்சிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். தினமணி நாளிதழில் இணையாசிரியராக பணியாற்றியவர்.

1986ம் ஆண்டு கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை எழுதியவர். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சுதாங்கனுக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். அவரது மனைவி சாந்தி 2006-ஆம் ஆண்டு காலமானார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை நீடிக்கும்!

அனல் மின்ஊழியா்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை: மின்வாரியம் உத்தரவு!

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

SCROLL FOR NEXT