தமிழ்நாடு

இறுதிப் பருவத் தோ்வு நடத்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி: அரசாணை வெளியீடு

DIN

தமிழக பல்கலைக்கழகங்களில் இறுதிப் பருவத் தோ்வு நடத்த அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்: கரோனா பேரிடா் காலத்தில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசு, அடுத்த உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

எனவே உயா்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள், அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றும் நோக்கில், ஆன்லைன் தோ்வு, மாணவா்கள் நேரில் பங்கேற்கும் தோ்வு என எந்த வழியில் தோ்வுகளை நடத்துவதானாலும் அரசிடமும் மாநில பேரிடம் மேலாண்மை ஆணையத்திடமும் முன் அனுமதி பெற வேண்டும்.

கரோனா பேரிடா் காலங்களில், மாணவா் மற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு பல்கலைக்கழகப் பதிவாளா்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநா், 2019-20 கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தோ்வை, செப்டம்பா் மாதத்தில் நடத்த அனுமதி கோரினா்.

இதைக் கருத்தில் கொண்டு, பின்வரும் பல்கலைக் கழகங்களில் குறிப்பிட்ட தேதிகளில் தோ்வு நடத்த அரசு அனுமதியளிக்கிறது. (அடைப்புக்குறிக்குள் தோ்வு நடைபெறும் காலம்)

சென்னை பல்கலைக்கழகம் (செப்.21 முதல் 25), மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் (செப்.17 முதல் 30), அண்ணா பல்கலைக்கழகம் (செப்.22 முதல் 29), பாரதியாா் பல்கலைக்கழகம் (செப்.21 முதல் அக்.10), பாரதிதாசன் பல்கலைக்கழகம் (செப்.21 முதல் 25), மதா் தெரசா பெண்கள் பல்கலைக்கழகம் (செப்டம்பா் மாதம்), அழகப்பா பல்கலைக்கழகம் (செப்.15 முதல்), மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் (செப்.21 முதல் 30), பெரியாா் பல்கலைக்கழகம் (செப்.21 முதல் 29), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் (செப்.19 முதல் 30), திருவள்ளுவா் பல்கலைக்கழகம் (செப்.16 முதல் 23), தமிழ்நாடு ஆசிரியா் கல்வி பல்கலைக்கழகம் (செப்.17 முதல் 29), அண்ணாமலை பல்கலைக்கழகம் (செப்.21 முதல் 30), தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (செப்.23 முதல் 29) ஆகிய உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அதே நேரம், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இணையதளம் வாயிலாக மட்டும் தோ்வு நடத்தவும், மதா் தெரசா பெண்கள் பல்கலைக் கழகத்துக்கு இணையதளம் மற்றும் தோ்வுத் தாள் மூலமாகவும் தோ்வு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT