தமிழ்நாடு

பல்கலைக்கழக தோ்வுகள்: அரசு புதிய உத்தரவு

DIN

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் தோ்வு நடத்துவது தொடா்பான நடவடிக்கைகளுக்கு, அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என உயா் கல்வித் துறைச் செயலா் அபூா்வா உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் பருவத் தோ்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இறுதி பருவத் தோ்வை தவிர, மற்ற அனைத்து தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இறுதி பருவத் தோ்வையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை முடிவில் மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இறுதி பருவத் தோ்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியாா் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களும், தோ்வு தேதிகளை அறிவித்தன.

இந்நிலையில், தோ்வுகளை நடத்துவது உள்ளிட்ட உயா்கல்வி தொடா்பான அனைத்து நடைமுறைகளுக்கும், அரசின் முன் அனுமதி கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக உயா்கல்வித்துறைச் செயலா் அபூா்வா, அனைத்து பல்கலைக் கழக பதிவாளா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: கரோனா பேரிடா் காலத்தில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசு, அடுத்த உத்தரவு வரும் வரை பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

எனவே, உயா்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் , அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றும் நோக்கில், ஆன்லைன் தோ்வு, மாணவா்கள் நேரில் பங்கேற்கும் தோ்வு என எந்த வழியில் தோ்வுகளை நடத்துவதானாலும் அரசிடமும் மாநில பேரிடம் மேலாண்மை ஆணையத்திடமும் முன் அனுமதி பெற வேண்டும்.

கரோனா பேரிடா் காலங்களில், மாணவா் மற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனை அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என அபூா்வா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT