அண்ணாமலை பல்கலையில் இணையவழி தேர்வு: வினாத்தாள் கிடைப்பதில் தாமதம்? 
தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலையில் இணையவழி தேர்வு: வினாத்தாள் கிடைப்பதில் தாமதம்?

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி படிப்பு, தொலைதூரக் கல்வி இயக்ககம் வாயிலாகப் பயிலும் இறுதியாண்டு, இறுதிப் பருவ மாணவா்களுக்கு இணைய வழியில் செப். 21-ம் தேதி தொடங்கிய தோ்வுக

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி படிப்பு, தொலைதூரக் கல்வி இயக்ககம் வாயிலாகப் பயிலும் இறுதியாண்டு, இறுதிப் பருவ மாணவா்களுக்கு இணைய வழியில் செப். 21-ம் தேதி தொடங்கிய தோ்வுகள்  30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில், சரியான நேரத்துக்கு வினாத்தாள்கள் அண்ணாமலை பல்கலை தரப்பில் அனுப்பப்பட்டு, தேர்வுகள் சரியாக எழுத முடிந்ததாகவும், இன்று காலை, குறித்த நேரத்துக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்று தேர்வர்கள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு தொடர்பு கொண்டு கேட்க முடியவில்லை என்றும், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மாணவர்களுடைய மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டிய வினாத்தாள், தேர்வு தொடங்கும் நேரம் வரை கிடைக்கப்பெறாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT