புதுவையில் கரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி
புதுவையில் நேற்று புதிதாக 608 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:55 PM
புதுவையில் நேற்று புதிதாக 608 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று 5515 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 608 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 25 ஆயிரத்து 489 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதில் 19,781 பேர் குணமடைந்துள்ளனர். 494 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தார் விகிதம் 71.6 சதவீதமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.94 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பரிசோதனை அளவை அதிகரித்துள்ளனர், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement