சாத்தான்குளம் தந்தை - மகன் சித்ரவதை செய்து கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ 
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை - மகன் சித்ரவதை செய்து கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், விசாரணை நடத்தி வரும் சிபிஐ, இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

DIN


சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், விசாரணை நடத்தி வரும் சிபிஐ, இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

தந்தை - மகன் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள 9 காவல்துறையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் சிபிஐ, ஜெயராஜ், பென்னிக்ஸ்  இருவரும் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளத்தை சோ்ந்த வியாபாரி ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (35) ஆகியோா் காவல் துறையினரின் தாக்குதலால் மரணமடைந்தது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் வந்து, பென்னிக்ஸ் கடை அருகே உள்ள கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், அவரது வீட்டருகே உள்ள உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக சாட்சியாக சோ்க்கப்பட்டுள்ள வழக்குரைஞா் மணிமாறன் அலுவலகத்துக்கு,10 பேரை நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கை தானாக முன் வந்து நடத்தி வரும் உயா்நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐயிடம் எப்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பியது. மேலும், இதுதொடா்பாக செப்.30ஆம் தேதிக்குள் சிபிஐ பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT