கொடைக்கானலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி 
தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலாத் துறை சார்பில் உலக சுற்றுலா தினம்

கொடைக்கானலில் உலக சுற்றுலாத் தினம் தமிழ் நாடு ஹோட்டல் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் உலக சுற்றுலாத் தினம் தமிழ் நாடு ஹோட்டல் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.
 
இந் நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

விழாவில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்கள்,சமூக ஆர்வலர்கள்,பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பேசினார்கள்.

சுற்றுலாவும் ஊரக மேம்பாடு வளர்ச்சி குறித்து பலர் பேசினார்கள்.

சுற்றுலாத் தினம் என்பது சுற்றுலா இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் கொண்டாட வேண்டும். அப்போது தான் சுற்றுலா தினம் கொண்டாடப்படுவது குறித்து வரும் சுற்றுலாப் பயணிகளும்,பொது மக்களுக்கும் தெரியும். எனவே வரும் காலங்களில் சுற்றுலாத் தினத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT