தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

DIN

லக்னௌ நீதிமன்றத்தில் பாபா் மசூதி வழக்கில் தீா்ப்பு வெளிவர இருப்பதை தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாபா் மசூதி வழக்கில் தீா்ப்பு, உத்தர பிரதேச மாநிலம் லக்னௌ நீதிமன்றத்தில் புதன்கிழமை வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாவண்ணம் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், விழுப்புரம், காட்பாடி, கோவை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் எழும்பூா், சென்ட்ரல், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலைங்களில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை காலை 6 மணி முதல் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு, ரயில் நிலையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படுவாா்கள். ரயில் நிலையங்கள், ரயில்களில் அடிக்கடி சோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT