தமிழ்நாடு

கொடைக்கானல்: வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களைப் பார்க்க அனுமதி கிடைக்குமா?

DIN

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன் பின் கடந்த 9−ந் தேதி முதல் கொடைக்கானல் சுற்றுலா இடங்களான ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் கோக்கர்ஸ்வாக் ஆகிய இடங்களை மட்டும் பார்வையிடுவதற்கு அரசு அனுமதியளித்தது.

அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு,மோயர் பாயிண்ட் பேரிஜம் போன்ற பகுதிகளுக்கு அனுமதி வழங்குவது வனத்துறையினர் இன்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனையில் அக்டோபர் 1−ந் தேதி முதல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என வனத்துறை ரேஞ்சர் ஆனந்த் தெரிவித்தார்.

வனத்துறையினர் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை பார்க்க அனுமதி கொடுப்பார்களா? என்பது வரும் அக்டோபர் 1-ந் தேதி தான் தெரியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT