தமிழ்நாடு

விழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

DIN

திங்கள்கிழமை நள்ளிரவில் பெய்த மழை காரணமாக விழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 60 வயது பெண் பலியானார்.

விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தெற்குத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சரோஜா (60). கூரை வீட்டில் சரோஜா மற்றும் அவரது மகன் இளங்கோவன் (45) தனியாக வசித்து வந்தனர்.

உயிரிழந்த மூதாட்டி சரோஜா.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக, இவர் வீட்டின் பின்புற சுவர் மழையில் இடிந்து இவர்கள் மேல் விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே சரோஜா உயிரிழந்தார். படுகாயமடைந்த இளங்கோவன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தகவலின்பேரில் ஏனாதிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ்நாராயணன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசை ஒரு புல்வெளி..!

சிரிப்பு மல்லிகைப்பூ.. பிரனிதா!

இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும் ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த்; முன்னாள் வீரர் புகழாரம்!

நியூசிலாந்தின் நடை மரமும் கோரி மரமும்!

'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் எப்போது?

SCROLL FOR NEXT