முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.536 உயர்வு

சென்னையில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.536 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 4 ஜனவரி 2021, 4:15 pm IST
Gold prices rise by Rs 536 per ounce
பகிர்:

சென்னையில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.536 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.536 உயா்ந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.67 உயா்ந்து, ரூ.4,815 ஆக உள்ளது. 

Advertisement

Advertisement

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.10 உயர்ந்து ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,100 உயர்ந்து ரூ.74,100 ஆகவும் விற்பனையாகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,815

1 சவரன் தங்கம்...............................38,520

1 கிராம் வெள்ளி.............................73.10

1 கிலோ வெள்ளி.............................74,100

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,748

1 சவரன் தங்கம்...............................37,984

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.