கரோனா குறைவதால் தளர்வுகள் வழங்கப்படுகிறது: ஜெயக்குமார்
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் தான் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் தான் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் 100 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கு எதிர்ப்பு எழுந்தது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி மிக மிக கவனத்துடன் தளர்வுகள் கொடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
இதற்கு முன்பு இத்தகைய அறிவிப்பு கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய அவர், சுகாதாரத்துறையின் ஆலோசனையின் படியே தளர்வுகள் அறிவிக்கப்படுவதாகக் கூறினார்.
தமிழக திரையரங்குகளில் 100 சதவிகிதம் ரசிகர்களை அனுமதிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.