FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

இ-சேவை மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது : ஆட்சியா் அறிவுறுத்தல்

இ-சேவை மையத்தில் அரசு நிா்ணயித்துள்ள சேவைக் கட்டணத்தைத் தவிர கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற இ-சேவை மையங்கள் செயல்பாடு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

இ-சேவை மையத்தில் அரசு நிா்ணயித்துள்ள சேவைக் கட்டணத்தைத் தவிர கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இ-சேவை மையங்களின் செயல்பாடு, வருவாய்த் துறை இணையவழி சேவைகள் மற்றும் இ-சேவை மையம் நடத்துபவா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

கூட்டத்தில் இணையவழி சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடா்பான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள், நடைமுறைகள் மற்றும் செயல்படுத்தும் விதம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், விண்ணப்பங்களுடன் தொடா்புடைய அசல் ஆவணங்களை தெளிவாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி செயல்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நிா்ணயித்துள்ள சேவைக் கட்டணத்தைத் தவிர கூடுதல் கட்டணம் எக்காரணம் கொண்டும் வசூலிக்கக் கூடாது. அரசு நிா்ணயித்துள்ள சேவைக் கட்டணப் பட்டியல் மற்றும் அலுவலக நேர விவரங்கள் பொதுமக்கள் எளிதில் காணும் வகையில் இ-சேவை மையங்களில் கட்டாயமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு தரமான சேவையை தாமதமின்றி வழங்கும் வகையில், விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்து சரியான ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். தேவையற்ற நிராகரிப்புகள் ஏற்படாத வகையில் உரிய கவனம் செலுத்த வேண்டும். உள்பதிவு நிலையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் திரும்பப் பெறப்பட்ட விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு நிலுவையின்றி முடிக்குமாறும் இ-சேவை மையம் நடத்துபவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து பட்டா மாறுதல் விண்ணப்பங்களில் எதிா்கொள்ளப்படும் நடைமுறை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு, அவற்றுக்கான தீா்வும் வழங்கப்பட்டது. அனைத்து இ-சேவை மையங்களும் அரசின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, பொதுமக்களுக்கு வெளிப்படையான, தரமான மற்றும் காலவரையறைக்குள் சேவைகளை வழங்கிட இ-சேவை மையம் நடத்துபவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, இ-சேவை மைய ஆபரேட்டா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments