முகப்பு
தமிழ்நாடு

தொடர் மழை,விலை வீழ்ச்சி எதிரொலி: மக்காச்சோள அறுவடை நிறுத்தி வைப்பு

தொடர் மழை மற்றும் விலை வீழ்ச்சியினால், தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் மக்காச்சோள அறுவடையை நிறுத்தி வைத்துள்ளனர்.

Updated On : 8 ஜனவரி 2021, 9:42 am IST
தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடையை நிறுத்தி வைத்துள்ள விவசாயிகள்.
பகிர்:



தம்மம்பட்டி: தொடர் மழை மற்றும் விலை வீழ்ச்சியினால், தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் மக்காச்சோள அறுவடையை நிறுத்தி வைத்துள்ளனர்.

தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடை காலத்தில், ஒரு மூட்டை (100 கிலோ) மக்காச்சோளம் விலை, அதிகபட்சம் ரூ.2200 வரைக்கும் விற்பனையாகி விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்தது. அதனால், இந்த ஆண்டு மானாவாரி பட்டத்தில், தம்மம்பட்டி பகுதியில், அதிக ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது.

கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது, ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.1400-க்கு விற்றது. அதிக விளைச்சல் மற்றும் தொடர் மழையின் காரணமாக, மக்காச்சோளத்தின் விலை படிப்படியாக குறைந்து, ஒரு மூட்டை ரூ.1180 ஆக வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை கவலை அடையச் செய்தது. 

Advertisement

Advertisement

வரும் பொங்கல் பண்டிகை முடிந்து, மானாவாரி பட்டத்தின் இறுதிகால அறுவடை, துவங்கும் போது, மக்காச்சோளம் விலை உயரும் என உள்ளூர் வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதால்,  தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடையை, பெரும்பாலான விவசாயிகள், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments