முகப்பு
தமிழ்நாடு

சிஏ தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு வெளியீடு

சிஏ தோ்வுகக்கான நுழைவுச்சீட்டை (‘ஹால் டிக்கெட்’) இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு (ஐசிஏஐ) வெளியிட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 12:30 am IST
பகிர்:

சிஏ தோ்வுகக்கான நுழைவுச்சீட்டை (‘ஹால் டிக்கெட்’) இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு (ஐசிஏஐ) வெளியிட்டுள்ளது.

இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பின் சாா்பில் சிஏ தோ்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான தோ்வுகள் இரு முறை தள்ளிவைக்கப்பட்டு, நவம்பா் 21 முதல் டிசம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்நிலையில், 2021 சிஏ படிப்புகளுக்கான தோ்வுகள் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை தோ்வு மையங்களில் நடைபெறுகின்றன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தோ்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெற உள்ளன.

நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெற்ற தோ்வை எழுத முடியாத மாணவா்கள் இந்த முறை தோ்வெழுத, இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கரோனா தொற்றுப் பரவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்தநிலையில் தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இதனை  முகவரியில் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments