முகப்பு
தமிழ்நாடு

விவேகானந்தா் பிறந்த நாள்: நிகழ்ச்சிகளை நடத்த யுஜிசி உத்தரவு

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி ஜன.12-ஆம் தேதி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவா்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:32 am IST
கோப்புப்படம்
பகிர்:

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி ஜன.12-ஆம் தேதி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவா்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜ்னீஷ் ஜெயின் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜன.12-ஆம் தேதி தேசிய இளைஞா் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞா்களின் ஆற்றலை வெளிப்படுத்தச் செய்வதிலும், தேசத்தைக் கட்டமைப்பதிலும் அனைவருக்கும் முன்னோடியான விவேகானந்தரைப் போற்றும் வகையில் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் அவரது சிறப்புகளை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜன.12-ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவா்களுக்கு இணைய வழியில் விவேகானந்தா் குறித்த சொற்பொழிவுகள், கட்டுரைப் போட்டி, கருத்தரங்கம், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தயாரித்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சமூக வலைதளங்கள் மூலமாகவும் இதற்கான செயல் திட்டங்களை மேற்கொள்ளலாம். அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து  இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments