முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகளின் வாழ்வு சிறக்கட்டும்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் கடந்த காலங்களில் அனுபவித்து வந்த விவசாயிகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 12:20 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கடையநல்லூர்: பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் கடந்த காலங்களில் அனுபவித்து வந்த விவசாயிகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தி;

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அச் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.பல்வேறு பிரச்னைகளை அனுபவித்து வரும் விவசாயிகள் வாழ்க்கை சிறக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழ் பண்பாட்டை உலகமெங்கும் பறைசாற்றும் தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் அதற்கு உதவும் இயற்கைக்கு நன்றி செலுத்தும்  விழாவான இந்நாளில் அனைவரும் இன்புற்று இருக்க வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments