முகப்பு
தமிழ்நாடு

பவானியில் எம்ஜிஆரின் 104-ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்

பவானியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 6:27 pm IST
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குகிறார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.
பகிர்:

பவானி: பவானியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பவானி தேவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலாளர் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அதிமுக கொடியேற்று விழா நகரின் 27 வார்டுகளிலும் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோன்று, கவுந்தப்பாடி, ஜம்பை,  தளவாய்பேட்டை, புன்னம் உள்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பவானி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.