கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் நடைபெற்ற புனித வெள்ளி சிலுவை பாதை நிகழ்வு. 
தமிழ்நாடு

இலங்கை அகதிகள் முகாமில் புனித வெள்ளி சிலுவை பாதை நிகழ்வு

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மாதா கோவிலில் புனித வெள்ளியை ஒட்டி இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை உணர்த்தும் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மாதா கோவிலில் புனித வெள்ளியை ஒட்டி இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை உணர்த்தும் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் புனித வெள்ளியை ஒட்டி சிலுவை பாதை நிகழ்வும், சிறப்பு வழிபாடும் பாதிரியார்  ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வை ஒட்டி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்வை கிறிஸ்துவர்கள் தத்ரூபமாக நடித்தனர். அப்போது கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி பாடல்களை பாடி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்தனர்.

அவ்வாறே கும்மிடிப்பூண்டி பைபாஸ் தூய பவுல் ஆலயத்தில் ஆயர் சேகர் கிருபாகரன் தலைமையிலும்,  ஆரம்பாக்கத்தில் உள்ள நல்மேய்ப்பர் ஆலயத்தில் பாஸ்டர் இம்மானுவேல் தலைமையிலும் புனித வெள்ளி சிறப்பு  பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்வை ஒட்டி இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்தும் அறையப்படுவதற்கு முன்பும் பேசிய ஏழு வார்த்தைகளை கிறிஸ்துவர்கள் தியானித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT