முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 3,446 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் இன்று புதிதாக 3,446 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தமிழகத்தில் இன்று புதிதாக 3,446 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,446 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,96,226ஆக உயர்ந்துள்ளது. 
அதிகபட்சமாக சென்னையில் 1,290  போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,764-ஆக உயா்ந்துள்ளது. 
கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,834 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,63,258-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,204 போ் சிகிச்சையில் உள்ளனா். 
மாநிலத்தில் இன்று 81,467 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments