தமிழ்நாடு

தமிழகப் பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு

DIN

செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் விவரத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு  தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், அதற்கு அடுத்தபடியாக குளித்தலையில் 86 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடியில் 85.60 சதவீத வாக்குகளும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மிகக் குறைந்த வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களை அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகள் பிடித்துள்ளன.

மாவட்டங்களிலேயே கரூர் மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. 

234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் விவரம்.

இந்த தகவலை தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT