தமிழ்நாடு

அரசுப்பள்ளி கட்டடம் மீது ஆலமரக்கிளை ஒடிந்து விழுந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு

DIN

சென்னிமலை அருகே வாக்குப்பதிவு நடைபெற்ற அரசுப்பள்ளி கட்டடம் மீது 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை சேதம் அடைந்தது. பள்ளியிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடனடியாக வெளியே கொண்டு வரப்பட்டது.

சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் தேர்தலுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் அருகில் உள்ள மற்றொரு பள்ளியிலும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச் சாவடிகளில் பசுவபட்டி மற்றும் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 501 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

வாக்குப்பதிவு நடந்த அன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்ல இரவு 12.30 மணிக்கு மேல் ஆனதால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பள்ளியிலேயே வைக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்தல் அலுவலர்கள் பசுவபட்டி ஊர் மக்களோடு சேர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பாக பள்ளிக்கு வெளியே இருந்தனர். அப்போது இரவு 12 மணியளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற பள்ளியின் அருகே இருந்த சுமார் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆல மரக்கிளை ஒன்று சத்தத்துடன் ஒடிந்து விழுவதற்கான நிலையில் இருந்துள்ளது.

இதனைக் கண்ட தேர்தல் அலுவலர்களும், ஊர் பொதுமக்களும் பயந்து உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பள்ளியிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் 2 மரக்கிளைகள் இரு திசைகளில் ஒடிந்து விழுந்துள்ளது. இதில் ஒரு மரக்கிளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த பள்ளிக் கட்டடம் மீது விழுந்தது. இதனால் மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை முற்றிலுமாக சேதம் அடைந்தது. 

மேலும் இந்த பள்ளி அருகிலேயே இருந்த ஊராட்சி அலுவலகம் மீதும் மரக்கிளை விழுந்ததால் ஊராட்சி அலுவலகத்தின் ஓடுகளும் உடைந்தது. நல்லவேளையாக வாக்குப்பதிவு நடந்த சமயத்தில் ஏராளமான வாக்காளர்கள் அங்கு வாக்களிப்பதற்காக இருந்தனர். அப்போது மரக்கிளை ஒடிந்து விழாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT