ரம்ஜான் தொழுகை தொடங்குவதால் நகரை அழகுபடுத்த வேண்டுகோள் 
தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: ரம்ஜான் தொழுகை தொடங்குவதால் நகரை அழகுபடுத்த வேண்டுகோள்

ரம்ஜான் சிறப்புத் தொழுகை தொடங்க இருப்பதால், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அழகுபடுத்த இஸ்லாமியர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

DIN

ரம்ஜான் சிறப்புத் தொழுகை தொடங்க இருப்பதால், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அழகுபடுத்த இஸ்லாமியர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளும் முக்கியமான ஒன்று ரம்ஜான் பண்டிகை. உலகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் கொண்டாடும் முக்கியமான பண்டிகை ரம்ஜான். ஏப்ரல் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் இரவு தொழுகை தொடங்குகிறது. தொடர்ந்து 30 நாள்கள் இரவு தொழுகை நடத்திய பிறகு, மே 13ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இஸ்லாமியர்கள் பகல் முழுக்க உண்ணா நோன்பிருந்து, மாலை தொழுகைக்குப் பிறகு, ஜாதி, மத, பேதம் இல்லாமல்  இரவு அனைவருக்கும் கஞ்சி வழங்கி தானும் அருந்துவார்கள். 30 நாள்கள் நோன்பு திறக்கப்பட்டு, 30 நாள்களும் இரவு 8 மணி முதல், 10 மணி வரை சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். அப்போது, கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில், சின்னப் பள்ளி வாயில், மேலப்பள்ளி, ஆலிம் சாஹிப் அப்பா தைக்கால் பள்ளி வாயில், லெட்சுமாங்குடி, மேல் கொண்டாழி உள்ளிட்ட  பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாயில்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெறும். 

அனைத்து பள்ளி வாயில்கள் அருகே மற்றும் தெருக்கள் என அனைத்து இடங்களின் தெரு விளக்குகளும் சரி செய்து, எரிய விடவேண்டும். மேலும், ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிட வேண்டும். கொசு மருந்துகளையும், கரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிருமி நாசினிகளையும் தெளிக்கப்பட வேண்டும். மேலும் நகரின் மையப் பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு நகரை அழகுபடுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை எழுப்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT