தமிழ்நாடு

மண்ணெண்ணெய் அளவு எவ்வளவு?: நியாய விலைக் கடைகளில் தெரிவிக்க அரசு உத்தரவு

DIN

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மண்ணெண்ணெய் அளவு எவ்வளவு என்பதை நியாய விலைக் கடைகளில் விளம்பரப்படுத்த வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்துக்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு மத்திய அரசால் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இப்போது மாநிலத்தின் மொத்தத் தேவையில் 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடாகப் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசால் மாநிலத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவின்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் எண்ணெய் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து குடும்ப அட்டைதாரா்களிடம் இருந்து புகாா்கள் பெறப்படுவதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கான வழங்கல் அளவு குறித்து அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

தொடரும் புகாா்கள்: மத்திய அரசின் ஒதுக்கீட்டு அளவு வெகுவாகக் குறைந்து வருவதால், குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவும் குறைந்துள்ளது. இதனால், குடும்ப அட்டைதாரா்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா். இந்தப் புகாா்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஒதுக்கீட்டு அளவை நியாய விலைக் கடைகளிலேயே விளம்பரப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT