தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி கோட்டை மாரியம்மன் கோயிலில் மோசமடைந்து சமூக இடைவெளியுடன் வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள் 
தமிழ்நாடு

தமிழ்ப் புத்தாண்டு: திருப்பூர் கோயில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், விஸ்வேஸ்வரசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

DIN

திருப்பூர்: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், விஸ்வேஸ்வரசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி திருப்பூரில் உள்ள கோயில்களில் புதன்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில், திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஒட்டி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பூர் கோட்டை மாரியம்மன்

கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலை 5 மணி முதலே திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல, திருப்பூர் ஐயப்பன் கோயில், விஸ்வேஸ்வரசுவாமி கோயில், வீரராகவப் பெருமாள் கோயில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோயில் உள்ள அனைத்து கோயில்களிலும் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊத்துக்குளி அருகே உள்ள கதித்தமலை முருகன் கோயில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT