தமிழ்நாடு

கட்டுப்பாடுகளோடு மேடை நாடகங்கள் நடத்த நாடக கலைஞர்கள் கோரிக்கை

DIN

மணப்பாறை நாட்டுப்புற மற்றும் மேடை நாடக கலைஞர்கள் நலச்சங்கத்தினர், கட்டுப்பாடுகளோடு மேடை நாடகங்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சுமார் 500 குடும்பத்தினர் மேடை நாடக கலைஞர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்  பங்குனி, சித்திரை, வைகாசி என மூன்று, நான்கு மாதங்கள் மட்டுமே திருவிழா காலங்கள் மூலம் மேடை நாடகங்கள் நடத்தி தங்களது வருடாந்திர வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கதால் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டதையடுத்து மேடை நிகழ்ச்சிகளின்றி தங்களது வாழ்வாதாரத்தை கடன் வாங்கி சமாளித்து வந்த நாடக கலைஞர்களுக்கு, நிகழாண்டும் திருவிழாக்களுக்குத் தடை ஏற்பட்டுள்ளதால், வாங்கியுள்ள கடன்களையே திரும்பச் செலுத்த முடியாத நிலையில், எதிர்வரும் வருட நாள்களில் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது எனவும், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சினிமா மற்றும் சின்னதிரை கலைஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் போல தங்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் மேடை நாடகங்களை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அல்லது மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கி உதவிட வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட அனைத்து நாட்டுப்புற மற்றும் மேடை நாடக கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து கலைஞர்கள் தங்களது மனுவை நேரில் வட்டாட்சியரகத்திற்கு சென்று வருவாய் வட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான எம்.லஜபதிராஜிடம் அளித்தனர். 

கரோனா தொற்று, தேர்தல் நன்னடத்தை விதிகளைக் கூறி மனுவை நேரில் பெற்றுக்கொள்ள முதலில் மறுத்த அதிகாரிகள், பின் கலைஞர்களில் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மனுவைப் பெற்றுக்கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு மனு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT