தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகள். 
தமிழ்நாடு

கரோனா பரவல்: தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு தடை

கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

தஞ்சாவூர்: கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழக அரசுப் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. என்றாலும், கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட புராதன சின்னங்கள், நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தலங்களுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்கள் செல்ல வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT