நாமக்கல்: நகைச்சுவை நடிகர் விவேக் மறைவையொட்டி, நாமக்கல்லில் சனிக்கிழமை நாடக நடிகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவையொட்டி நாமக்கல் மணிக்கூண்டு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாடக நடிகர் சங்க தலைவர் ஆட்டோ ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த இரங்கல் நிகழ்ச்சியில் பொருளாளர் சுமதி, நிர்வாகிகள் டால்பின் பாலன், வத்சலா, புஷ்பா, மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.