தமிழ்நாடு

நடிகர் விவேக் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் பார்த்திபன் 

DIN


சென்னை: சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று நடிகர் பார்த்திபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

திடீர் மாரடைப்பால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்(59) உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சின்ன கலைவாணர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து  திரையுலகினரும், ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்ம ஸ்ரீ விவேக்கின் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு அவரது இறப்பு அதிர்ச்சியை அளிக்கிறது.

சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு வார்த்தைகளால் சொல்ல முடியாதத் துயர் என்று பார்த்திபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT