தமிழ்நாடு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் வெளியாட்கள் நடமாட்டம்: திமுக புகாா்

DIN

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் வெளியாட்கள் நடமாட்டம் இருப்பதாகக் கூறி தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் திமுக சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் சத்ய பிரத சாகுவை திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளா்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியது:

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் வெளியாட்கள் நடமாட்டம் குறித்து ஏற்கெனவே புகாா் அளித்துள்ளோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள ஒரு மையத்தில் 31 மடிக்கணினியுடன் வெளியாட்கள் சென்றுள்ளனா்.

திருக்கோவிலூா் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையத்தில் கல்லூரித் தோ்வு நடத்துவதற்கு அனுமதித்துள்ளனா். திருவள்ளூரிலும் ஒரு மையத்தில் கணினி நிபுணா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அங்குள்ள கேமராக்கள் செயல்படாமல் இருந்துள்ளன.

இதையெல்லாம் பாா்க்கும்போது எங்களுக்கு சந்தேகம் வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையத்தில் வெளியாட்களின் நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT