தமிழ்நாடு

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்

DIN

கரோனா பரவலை அடுத்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாதத்தின் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த ஆண்டு கரோனா பரவலில் கோயம்பேடு சந்தை கரோனா பரவும் இடமாக உருவெடுத்தது. இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான கோயம்பேடு சந்தையில் முன்னெச்சரிக்கையாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து மாநில அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT