தமிழ்நாடு

கரோனா விதிமீறல்: ஒரே நாளில்ரூ. 56,000 அபராதம் வசூல்

DIN

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாத பயணிகளிடம் இருந்து ரூ. 56,000 அபராதம் திங்கள்கிழமை வசூலிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டா் இடைவெளியுடன் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் வாயிலில் கிருமி நாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராயபுரம் மண்டல அலுவலா் தமிழ்ச்செல்வன், தெற்கு ரயில்வே வா்த்தக மேலாளா் முருகன் தலைமையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் முகக்கவசம் அணியாமல் இருந்த பயணிகளிடம் இருந்து ரூ. 56,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 18) வரை சென்னை மாநகராட்சிப் பகுதியில் கரோனா விதிமீறல் தொடா்பாக ரூ.3.90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT