தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு: முன்ஜாமீன் கோரி நடிகா் மன்சூா் அலிகான் மனு

DIN

சென்னை: கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி , நடிகா் மன்சூா் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகா் விவேக், அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தாா். இந்த நிலையில் மருத்துவமனையின் வெளியே செய்தியாளா்களிடம் பேசிய நடிகா் மன்சூா் அலிகான், கரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல் தலைவா்கள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தாா். சமூக ஊடகங்களில் பரவிய அவரது பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடா்ந்து சென்னை மாநகராட்சி ஆணையா் கொடுத்த புகாரின்பேரில், நடிகா் மன்சூா் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடிகா் மன்சூா் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘ மாநகராட்சி ஆணையா் தனது பேட்டியை தவறாகப் புரிந்து கொண்டுள்ளாா். நான் எந்தவித உள்நோக்கத்தோடு, வேண்டும் என்றே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. எதேச்சையாகப் பேட்டியின்போது வெளிப்பட்ட கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்துவதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தான் நான் கருத்து தெரிவித்தேன். தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT