தமிழ்நாடு

இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்: உயர் நீதிமன்றம்

DIN

சென்னை: இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரிக்க அதிவேகமாகச் செல்வதே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பள்ளிப் பாடத் திட்டங்களில் சாலைப் போக்குவரத்து விதிகளை கற்பிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

எக்ஸ்பிரஸ் சாலையில் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற உத்தரவை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாகச் செல்வதே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT